search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள வாலிபர்"

    ஐ.எஸ்., ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுக்கு பேஸ்புக்கில் ஆதரவு தெரிவித்த கேரள வாலிபரை மலப்புரம் போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேர் வளைகுடா நாடுகளுக்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததை மத்திய உளவு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணிகளும் நடந்ததை தேசிய புலனாய்வு அதிகாரிகள் அறிந்து கொண்டனர். இதில் ஈடுபட்ட ரியாஸ் அபுபக்கர் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து ரியாஸ் அபுபக்கருக்கு துணைபுரிந்த நபர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன.

    இதற்காக கேரளாவில் இருந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் கணக்குகளும் கண்காணிக்கப்பட்டன. இதில் கேரளாவின் மஞ்சேரியை அடுத்த ஆனக்காயம் பகுதியில் இருந்து ஒருவர் ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    பேஸ்புக்கில் இந்த நபர் அடிக்கடி இந்த அமைப்புகளின் கொள்கைகள் பற்றி கருத்து பதிவிட்டதோடு, இவற்றின் செயல்பாடுகளையும் பாராட்டி வந்தார். இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மட்டுமின்றி மேலும் பல பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

    இதையடுத்து மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் ஐ.எஸ். மற்றும் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் வாலிபரின் முகவரியை கண்டு பிடிக்கும் பணி நடந்தது.

    இதில் அந்த வாலிபர் மஞ்சேரியை அடுத்த ஆனக்காயத்தைச் சேர்ந்த அஸ்கார்(வயது47) என்பது தெரிய வந்தது. அவரை மலப்புரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் மஞ்சேரி முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


    திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் கேரள வாலிபரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ராஜீவ் மகன் கவுதம் (வயது22). இவர் பாண்டிச்சேரியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக கேரளாவில் கன மழை பெய்ததால் தனது குடும்பத்தினர் நிலை குறித்து அறியாமல் மிகவும் கவலையுடன் இருந்தார்.

    தற்போது மழை நின்று போக்குவரத்து சீரானதை தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயிலில் கேரளாவிற்கு வந்து கொண்டிருந்தார்.

    ரெயிலில் அவருடன் பயணித்த ஒரு தரப்பினருக்கும், கவுதமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கும்பல் கவுதமை கடுமையாக தாக்கி உள்ளனர். திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தபோது கவுதம் தனது உடமைகளுடன் கீழே இறங்கினார். பின்னர் அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்தார். ரத்த காயத்துடன் கிடந்த அவரை ரெயில்வே ஊழியர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை தாக்கிய கும்பல் யார்? வழிப்பறி சம்பவத்தில் தாக்கினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கறிக்காக செத்து மிதந்த ஆட்டு உடலை மீட்க கிணற்றில் இறங்கிய வாலிபர் விஷவாயு தாக்கி பலியானார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா பல்லசேனையை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கண்ணன் (வயது 42). இவர் இன்று காலை அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க புறப்பட்டார்.

    வரும்வழியில் ஒரு பாதுகாப்பற்ற கிணறு இருந்தது. அதை எட்டிப் பார்த்தபோது கிணற்றில் ஒரு ஆடு செத்து மிதந்தது. கிணற்றில் இறங்கி ஆட்டை மீட்டால் கறி கிடைக்கும் என்று நினைத்த கண்ணன் இது குறித்து தனது நண்பருக்கு தெரிவித்தார். அவரது நண்பரும் வந்தார்.

    கிணற்று மேட்டில் நண்பர் நின்று கொண்டு ஆட்டின் உடலை கயிறு மூலம் இழுக்க தயாரானார். 30 அடி அழமுள்ள கிணற்றில் 5 அடி அழத்திற்கு தண்ணீர் இருந்தது.

    இந்நிலையில் கண்ணன் கிணற்றில் கயிறு மூலம் இறங்க தொடங்கினார். 20 அடி அழத்திற்கு சென்றதும் கண்ணனை வி‌ஷவாயு தாக்கியது. இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. என்னால் முடியவில்லை என்று கிணற்றில் இருந்து அபாய குரல் எழுப்பினர். முடியவில்லை என்றால் வந்து விடு என்று நண்பர் கூறினார்.

    ஆனால் திடீரென கண்ணன் கிணற்றுக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர் இது குறித்து சித்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கோவை அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கேரள வாலிபருக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உதவி செய்த நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    சென்னை:

    ம.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    7-ந்தேதி(நேற்று) பிற்பகல் 2 மணி அளவில், கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த இளைஞரை, அப்பகுதி வாழ் இளைஞர்கள், காரில் இருந்து வெளியே எடுத்து, 108 ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டு வரவழைத்து, மனிதாபிமானத்துடன் செயல்பட்டனர்.

    அதேநேரத்தில் அந்த வழியாக வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கோவை மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அந்த இளைஞரை ஆம்புலன்சில் ஏற்று வதற்கு உதவினர்.

    அந்த இளைஞர் படுகாயம் அடைந்ததால், உடல் முழுவதும் ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது.

    கோவை அரசு மருத்துவமனை இயக்குனரிடம் வைகோ செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, விபத்து குறித்த தகவலை சொல்லி, அந்த இளைஞருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனடியாக ஏற்பாடு செய்கிறேன் என இயக்குனர் தெரிவித்தார். இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×